~கிளவ்ஸ் சர்ச்சை: பிசிசிஐ கோரிக்கை நிராகரிப்பு!

Published On:

| By Balaji

தோனி துணை ராணுவ சிறப்பு படையின் முத்திரை பதிக்கப்பட்ட கிளவ்ஸ் அணிந்து விளையாடுவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் முன்வைத்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின் போது தோனி பயன்படுத்திய கீப்பிங் கிளவ்ஸ் சர்ச்சையைக் கிளப்பியது. [இந்த விவகாரத்தில்](https://minnambalam.com/k/2019/06/08/7) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தோனிக்கு ஆதரவாக நின்றது. “ஐசிசி விதிமுறைகளின்படி வீரர்கள் தனிப்பட்ட வர்த்தகம், மதம் மற்றும் இனம் சார்ந்த லோகாவை தான் பயன்படுத்தக்கூடாது. ஆனால் தோனி பயன்படுத்துவது அது சார்ந்தது இல்லை” என்று ஐசிசியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

உலகக் கோப்பைத் தொடரில் தோனி அதே கிளவ்ஸை அணிந்து ஆட அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் தற்போது ஐசிசி அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது. தோனி இரு ஐசிசி விதிமுறைகளை மீறியுள்ளதால் அதற்கு அனுமதியளிக்க முடியாது என்று விளக்கமளித்துள்ளது.

இதையடுத்து ஐசிசி நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய், “ இந்த விவகாரத்தை மேலும் சர்ச்சையாக்க விரும்பவில்லை. ஐசிசியின் பதிலை ஏற்றுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார். இதனால் கிளவ்ஸ் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

**

மேலும் படிக்க

**

**

[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)

**

**

[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)

**

**

[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)

**

**

[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)

**

**

[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share