கிறிஸ்துவர்கள் பிரிட்டீஷ்காரர்கள்: பாஜக தாக்கு!

Published On:

| By Balaji

நாட்டிலுள்ள கிறிஸ்துவர்கள் அனைவரும் பிரிட்டீஷ்காரர்கள் என பாஜக எம்.பி கோபால் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

மும்பையின் வடக்கு பகுதியில் சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற இஸ்லாமியர்களின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கோபால் ஷெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர், “நாட்டிலுள்ள கிறிஸ்துவ சமூகத்தினர் பிரிட்டீஷ்காரர்களாவர். அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பிரிட்டீஷ்காரர்களாகவே பங்காற்றினர். அதாவது சுதந்திரத்திற்கு எதிரானவர்களாகவே இருந்தார்கள். அதே சமயத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார்கள்” என்று பேசினார்.

இப்பேச்சுக்கு கிறிஸ்துவர்கள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கத்தோலிக்க சபைகள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. இது போன்ற பேச்சுகள் நாட்டின் சமய ஒற்றுமையையும் சகோதர மனப்பான்மையையும் சீர்குலைப்பதற்காகத் திட்டமிட்டு மேற்கொள்பவையாகும் என்று மும்பை கத்தோலிக்க சபையின் முன்னாள் தலைவர் டால்பி டி சூசா தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel