கிறிஸ்தவப் பள்ளிகளில் வாக்குச் சாவடிகள்: வழக்கு!

public

பெரிய வியாழன் பண்டிகை காரணமாக, கிறிஸ்தவப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை வேறு பள்ளிகளுக்கு மாற்றக் கோரி தமிழ்நாடு பிஷப் கவுன்சில் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 18ஆம் தேதியன்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். ஏப்ரல் 19ஆம் தேதி புனித வெள்ளியும், ஏப்ரல் 21ஆம் தேதியன்று ஈஸ்டர் பண்டிகையும் வரவுள்ளன. அந்த வாரத்தில் கிறிஸ்தவ மக்கள் பெரிய வியாழன் பண்டிகையையும் கொண்டாடவுள்ளனர். இதனால் தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் அல்லது கிறிஸ்தவப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி, தமிழ்நாடு பிஷப் கவுன்சில் தலைவர் அந்தோணி பப்புசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

“பெரிய வியாழன், புனித வெள்ளி, ஈஸ்டர் போன்ற பண்டிகைகளுடன் அந்த வாரம் முழுவதும் புனித வாரமாக கடைபிடிக்கப்படவுள்ளது. தேர்தலின்போது கிறிஸ்தவப் பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் போது, தேர்தல் ஆணையம் அப்பள்ளிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும். இதனால், பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாத நிலை ஏற்படும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வின் முன்பாக, நாளை (மார்ச் 19) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0