நடிகர் கிரேசி மோகனின் உடல் சென்னை பெசண்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
நடிகரும், திரைக்கதை ஆசிரியருமான கிரேசி மோகன் நேற்று (ஜூன் 10) காலை மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி மதியம் 2 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று (ஜூன் 11) மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டிலிருந்து அவரது உடல் பெசண்ட் நகருக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. பெசண்ட் நகரில் கிரேசி மோகனின் உடலுக்கு குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் நடிகர் கமலஹாசன், பூஜா குமார், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதன்பின் பெசண்ட் நகர் மின்மயானத்தில் கிரேசி மோகனின் உடல் தகனம் செய்யப்பட்டது. 1952ஆம் ஆண்டு பிறந்த கிரேசி மோகன் இயந்திர பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். நாடகக் கலையில் அதிக ஆர்வம் இருந்ததால் தனது கல்லூரி காலத்திலேயே நாடகங்களுக்கு கதை எழுதி அரங்கேற்றியுள்ளார். அவரது நாடகங்களுக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த எழுத்தாளருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். நாடக ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், ஓவியர், நடிகர், வசன கர்த்தா என பல்முகத் திறமைகளைக் கொண்டவர் கிரேசி மோகன். நடிகர் கமலஹாசனுக்கு நெருக்கமான நண்பரானவர் கிரேசி மோகன். இருவரும் இணைந்து பணிபுரிந்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன
**
மேலும் படிக்க
**
**
[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்](https://minnambalam.com/k/2019/06/11/21)
**
**
[எட்டு வழிச் சாலை ஆர்வம் காவிரியில் இல்லாதது ஏன்?](https://minnambalam.com/k/2019/06/11/20)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”