~கிரிக்கெட்: இன்று சாதனையாளர்களின் பிறந்த நாள்!

public

கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகள் படைத்த நான்கு முக்கிய வீரர்களுக்கு இன்று (மே 17) பிறந்த நாள்.

**ஆல்ஃபிரட் பெர்சி ஃப்ரீமேன்**

டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் மூன்று முறை 10 விக்கெட்டுகள், ஒரே போட்டியில் இருமுறை 17 விக்கெட்டுகள், மூன்று ஹாட்ரிக் சாதனைகள் என பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்ஃபிரட் பெர்சி ஃப்ரீமேன் பிறந்த தினம் இன்று.

கிரிக்கெட்டில் சாதனை படைத்தவர்களுக்கென ஆண்டுதோறும் வெளியாகும் விஸ்டன் புத்தகத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டின் மிக முக்கிய சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பெர்சி ஃப்ரீமேன் இடம்பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவர் படைத்த சாதனைகள் அளப்பரியன.

**ஃப்ரீமேனின் சாதனைகள்:**

1928- 1933ஆம் ஆண்டு வரை அவர் பங்கேற்ற டெஸ்ட் போட்டிகளில் 1673 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் (ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 250 விக்கெட்டுகள்).

1929, 1930 மற்றும் 1931 ஆண்டுகளில் மூன்று முறை ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஒரே போட்டியில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 140 முறை கைப்பற்றியுள்ளார்.

முதல் தர டெஸ்ட் கிரிக்கெட்டில் 592 போட்டிகளில் விளையாடிய ஃப்ரீமேன், 3776 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அதில் 50 சதவிகிதத்துக்கும் மேலான விக்கெட்டுகள் மற்ற வீரர்களின் துணையின்றி பவுல்ட், காட் அண்ட் பவுல்ட், எல்.பி.டபிள்யூ மூலம் பெறப்பட்டவையே.

முதல் தர டெஸ்ட்டில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் 1,110 போட்டிகளில் பங்கேற்று 4,204 விக்கெட்டுகளுடன் ரோட்ஸ் முதலிடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் ஃப்ரீமேன் 3776 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதற்காக அவர் எடுத்துக்கொண்ட போட்டிகள் வெறும் 592 மட்டுமே.

**பகவத் சந்திரசேகர்**

1964ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்ற பகவத் சந்திர சேகர் பிறந்த தினமும் இன்றுதான்.

**பகவத் சந்திரசேகரின் சாதனைகள்**

38 ரன்களுக்கு 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றக் காரணமாக இருந்தவர் இவர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா, முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில் இவரது பங்களிப்பு (104 ரன்களுக்கு 12 விக்கெட்டுகள்) மிக முக்கியமானது.

**மிக்கி ஆர்தர்**

பாகிஸ்தான் அணி 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையைக் கைப்பற்றியதில் முக்கியப் பங்காற்றிய மிக்கி ஆர்தர் பிறந்த தினம் இன்று.

1986ஆம் ஆண்டு முதல் 2001 தனது கிரிக்கெட் பயணத்தைத் தென்னாப்பிரிக்க அணியில் தொடங்கிய இவர், 2016ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றிவருகிறார். இவரது தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணி டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் போட்டிகளின் தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

**தெம்பா பவுமா**

தென்னாப்பிரிக்கா அணியில் கறுப்பர் இனத்திலிருந்து வந்து சதமடித்த வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான தெம்பா பவுமா பிறந்த தினமும் இன்றுதான்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *