)கிட்ஸ் கார்னர்!

Published On:

| By Balaji

இயற்கையைப் பாதிக்காமல் விளையாடுவோம்!

இப்போ விளையாட்டுகளைப் பத்தி பேச வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கு குட்டீஸ். ஏன்னா நம்முடைய விளையாட்டுப் பழக்கங்கள் நம்மையும் சூழலையும் படுமோசமா பாதிக்குது.

உங்களுக்குப் புரியுற மாதிரி ஒரு கேள்வி கேக்குறேன்.

இப்போ நீங்க விளையாடுவதற்கு என்று வாங்கும் பொருட்களில் ஒரே ஒரு பொருளாவது இயற்கையை மாசுபடுத்தாமல் செய்யப்பட்டதா?

இந்த ஒரு கேள்விக்கு மட்டும் உண்மையான பதிலை நிதானமா யோசிச்சு பாருங்க. நாம எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டு இருக்கோம்னு புரியும்!

சாதாரணமா கிரிக்கெட் என்கிற விளையாட்டை எடுத்துக்குவோம். ஒரு கிரிக்கெட் பேட், பால் வாங்குனாகூட, அந்த பேட் தயாரிப்பதற்காக வெட்டப்படும் மரங்கள், உறிஞ்சப்படும் தண்ணீர், அதை பேக் செஞ்சு கொண்டுவர்ற பிளாஸ்டிக் கவர் வரைக்கும் எல்லாமே நேரடியா இயற்கையைச் சேதப்படுத்துபவை.

இப்போல்லாம் பேட், பால் இருக்கோ இல்லையோ… கிளவுஸ், பேட், கேப் எல்லாம் கட்டாயம். அது இருந்தாதான் கவுரவம்னு நினைக்கிறாங்க.

அதை கவுரவம்னு நினைக்க வைப்பதற்காக விளம்பரப்படுத்தி நமக்குத் தேவையில்லாததையெல்லாம் வாங்க வைக்கிறாங்க. நம் உடலையும் மனதையும் தாண்டி விளையாடுவதற்கு நமக்கு ஒண்ணுமே தேவையில்லை நண்பர்களே…

உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் இருந்துச்சுன்னா, விளையாடுவதற்குத் தேவையானவற்றை நாம சுத்தி இருக்க சூழலிலிருந்தே கண்டுபிடிச்சிடுவோம்!

கொஞ்சம் யோசிச்சு பாருங்க குட்டீஸ். நாம எதுக்கு விளையாடுறோம்? நாம சந்தோஷமா இருக்கவும், உடல் ஆரோக்கியமா இருக்கவும் தானே? நீங்க பெரும்பாலும் விளையாடுற ‘நவீன விளையாட்டுகள்’ பொறாமையையும் மன அழுத்தத்தையும்தான் கொடுக்குது. உங்களுக்கும் தீங்கு செஞ்சு, சூழலையும் கெடுக்குற இந்த நவீன பொருட்கள் சார்ந்த விளையாட்டுகள் வேண்டாமே நண்பர்களே..!

**- நரேஷ்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share