)கிட்ஸ் கார்னர்!

Published On:

| By Balaji

இந்த விளையாட்டெல்லாம் தெரியுமா?

உங்களுக்கு தெரிஞ்ச விளையாட்டுகளோட பெயர்களை சொல்லுங்க குட்டீஸ்.

“Angry Birds, PUBG, Pokemon…

இருங்க, இருங்க. நான் வீடியோ கேம்ஸ் பத்தி சொல்லல. வெளிய விளையாடுற விளையாட்டுகள் பத்தி சொல்லுறேன்.

“ஓ. அப்படினா கிரிக்கெட், ஃபுட்பால், வாலிபால், டென்னிஸ், ஹேண்ட் பால், பேஸ்கட் பால்,..”

வேற..?

“கேரம்போர்ட், செஸ், பிஸ்னஸ், லூடோ,..”

வேற..?

“வேற என்ன இருக்கு..?”

எந்தத் தொழில்நுட்பமும் இல்லாம, ஒரு ரூபாகூட செலவு பண்ணாம, நினைச்ச உடனே விளையாடுற மாதிரி விளையாட்டுகள் இருந்தா சொல்லுங்க பாப்போம்.

“ம்ம்.. ஓடி பிடிச்சு விளையாடுறது, லாக் அண்ட் கீ, கபடி, கோகோ அப்புறம்.. அப்புறம்..”

அப்புறம் என்னன்னு சொல்லுங்க..

“அவ்ளோதான இருக்கு?”

அவ்ளோதான் இருக்கா..! நான் சில விளையாட்டுகளோட பெயர்களை சொல்லவா?

“கண்ணாமூச்சி, கிட்டிப்புல், கள்ளாங்காய், ஒளிஞ்சு விளையாட்டு, கிச்சு கிச்சு தாம்பளம், நாயும் துண்டும், பம்பரம், அம்பால், ஓரி, ராஜா ராணி, கோலி, போலீஸ் திருடன், காயே கடுப்பங்காய், தாயம், பல்லாங்குழி, பூப்பறிக்க வருகிறோம், குலை குலையா முந்திரிக்காய், ஏழாங்காய், டன் டன் யாரது, பொள்ளாச்சி பொள்ளாச்சி, கல்லடி, சீழ்க்கை, நுங்கு வண்டி ரேஸ், டயர் ரேஸ்,..”

ஆச்சரியமா இருக்கா நண்பர்களே..? நம்ம மரபுல இதைவிட அதிகமான விளையாட்டுகள் இருக்கு!

ஆனா, இப்போ ஏன் இதைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்கணும்? சொல்றேன்…

**- நரேஷ்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share