மனுஷனும் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குதான்!
“நாம விலங்குகளையும் தாவரங்களையும் பழக்கப்படுத்தினோம் இல்லையா? அதுபோலவே நம்ம நாமளே பழக்கப்படுத்திக்கிட்டோம்.”
பரிக்கு இந்த வாக்கியம் சட்டுனு புரியலை. விலங்குகளை நாம நம்ம தேவைக்காகப் பழக்கப்படுத்திக்கிட்டோம். தாவரங்களையும் நம்ம தேவைக்காகப் பழக்கப்படுத்திக்கிட்டோம். நம்மல நாமலே பழக்கப்படுத்தமுடியும்?
அந்தக் குரல் அதுக்கப்புறம் பேசலை. எல்லாத்துக்கும் என்னால விளக்கம் கொடுக்க முடியாதுனு தெளிவா சொல்லிடுச்சு.
பரி யோசிக்க ஆரம்பிச்சான்.
மனிதனும் காட்டு விலங்குதானா?
பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள்னா, காட்டோட குணத்தை விடுத்த வீட்டு விலங்குகள்னு அர்த்தம். மனிதனும் இப்போ வீடுகள்லதான் காட்டோட குணம் எதுவுமில்லாம வசிக்கிறான். பரிக்கு அந்தக் குரல் சொன்ன வாக்கியத்தோட அர்த்தம் புரிஞ்சது. ஆனா, ஒரே ஒரு கேள்வி மட்டும் இருந்தது.
“மனிதர்களை யார் எதுக்காகப் பழக்கப்படுத்தினாங்க?”
இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தது போலவே அந்தக் குரல் சத்தமா சொன்னது,
“மனிதர்களைப் பழக்கப்படுத்தியது இன்னொரு உயிரினம் அல்ல. உயிரற்ற ஒரு பொருள்.”“அது என்ன பொருள்?” என்று ஆர்வத்துடன் கேட்டான் பரி.
**- நரேஷ்**�,”