சிதறல்கள் கிரகங்கள் ஆன கதை
எரிஞ்சிட்டிருந்து சூரியனோட பாகங்கள் எல்லாம் எப்படி கிரகங்களா மாறுச்சுன்னு பரி கேட்குறதுக்கு வாயெடுக்கும் முன்பு, “அது பல கோடி வருடங்களாக நடந்த மாற்றம். அதை ஒரு நிமிடத்திலோ, ஒரு மணி நேரத்திலோ விளக்க முடியாது”னு சொல்லுச்சு அந்த குரல்.
”அப்போ, இது பூமியா மாறும் வரைக்கும் நான் இப்படியே பாத்திட்டிருக்கவா?” என்றான் பரி.
அந்தக் குரல் பலமா சிரிச்சது. ”பிரபஞ்சத்துக்குக் காலம் கிடையாது. இயங்கும் பொருட்களுக்குத்தான் காலம் தேவை. இயக்கமே இல்லாத பிரபஞ்சத்துக்குக் காலம் ஒரு பொருட்டல்ல. பிரபஞ்சம் இப்படியேதான் இருக்கிறது. இருக்கும். அதனால, சட்டுன்னு முன்னாடி போயிடுவோம்”னு சொல்லி முடிச்ச கணத்துல, பரியைச் சுற்றியிருக்கும் அனைத்தும் அதிவேகமாகக் காலத்தின் முன்னோக்கி நகர்ந்தது.
எரிந்துகொண்டிருந்த சூரியனின் சிதறல்கள் யாவும் அணைஞ்சு காற்று வீசியது. படுவேகமா வீசிய காற்றுச் சிதறல்களுக்கு ஓர் உருவம் கொடுத்தது. அடுத்து காற்று உறைய ஆரம்பிச்சு, கிரகங்கள் யாவும் முழுக்கப் பனியால் சூழப்பட்டன.
பரியைப் பூமியை மட்டும் கவனிக்கச் சொன்னது அந்தக் குரல். உறைந்து கிடந்த பூமி, கொஞ்சம் கொஞ்சமா தன்னோட உறை நிலையிலிருந்து மாற்றம் பெற்றது.
**- நரேஷ்**�,