மனிதர்கள் சேர்ந்து வாழ்வது ஏன்?
“மனிதர்கள் கூட்டமா வாழ ஆரம்பிச்சதுக்கு முக்கியக் காரணம் விவசாயம். எந்த ஒரு விலங்கினமும் அதிகபட்சம் 500 பேர் கொண்ட கூட்டமாதான் இருக்கும். அதற்கு மேல அந்தக் கூட்டத்தோட எண்ணிக்கை உயராது”னு சொல்லி யானைகளின் கூட்டம், மான்களின் கூட்டம், காட்டு எருதுகளின் கூட்டம், வரிக்குதிரைகளின் கூட்டம்னு எல்லாவற்றோட படங்களையும் காட்டியது அந்தக் குரல்.
விண்வெளியில் பரிக்கு, தன்னை சுத்தி அந்த விலங்குகள் இருக்குற மாதிரியான தோற்றத்தை அந்தப் படங்கள் ஏற்படுத்தின.
“ஆனா மனிதக் கூட்டம், பல ஆயிரம் பேர் எண்ணிக்கைக் கொண்டதா வாழ முடிஞ்சது. அது ஏன்னு தெரியுமா?” கேட்டது குரல்.
“ஏன்னா, எல்லாருக்கும் ஒரே இடத்துல சாப்பாடு தண்ணி எல்லாம் கிடைச்சது. அதனாலதான்.”
“இல்லை.”
“எல்லாரும் ஒரே கூட்டுக்குள்ள வாழும்போது அவங்களுக்குப் பாதுகாப்பு கிடைச்சது. அதனாலதானே?”
“இல்லை.”
“இதைத் தவிர வேற என்ன காரணமா இருக்கும்?”னு கோபப்பட்டுக் கேட்டான் பரி.
“இவையெல்லாம் காரணங்கள் இல்ல பரி. சேர்ந்து வாழ்வதால மனிதக் கூட்டத்துக்கு ஏற்பட்ட நன்மைகள். சேர்ந்து வாழ்தலின் விளைவுகள் இவை. சேர்ந்து வாழ்வதற்கான காரணங்கள் இவற்றைவிட ஆழமானவை”னு பொறுமையா பதில் சொன்னது குரல்.
“அது என்ன காரணம்?” கேட்டான் பரி.
**- நரேஷ்**�,”