)கிட்ஸ் கார்னர்!

public

பரியன் கேட்ட கேள்விகள்

படம்: ந.நந்தினி

பள்ளிக்குப் போறோம்னு சொல்லிட்டு யாருக்கும் தெரியாம, பரியும் அவன் நண்பர்களும் பள்ளிக்கூடத்தை கட் அடிச்சு விளையாட போனாங்க. நல்லா வேர்க்க விறுவிறுக்க விளையாடிட்டு குளத்துல குளிக்கலாம்னு போனாங்க. எல்லாரும் ஓடியாந்து குதிச்சாலும், பரிக்கு மட்டும் கொஞ்சம் தயக்கம். அப்பா நம்மள இந்தக் குளத்துல குளிக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காறேன்னு பயந்தான்.

“ஏன்பா இந்த குளத்துல குளிக்கக் கூடாது?”

“பெரியவுக திட்டுவாகடா…”

“அப்போ என் கூட படிக்கிற பயலுவ கொஞ்ச பேர் குளிக்கிறானுவ.. அவிங்கள பெரியவுக திட்ட மாட்டாங்ளா..?

“அவிங்க எல்லாரும் அந்த பெரியவுக வீட்டு புள்ளைக. அதனால திட்ட மாட்டாங்க”

இதற்கு மேல் என்ன கேட்பது என்று பரியனுக்குத் தெரியவில்லை. ஆனா, நிறைய யோசனைகள் எழுந்தது. “அவங்களும் என்கூடதான படிக்கிறாங்க? என்னவிட அவிங்க கம்மி மார்க்தான் எடுக்குறாங்க. டீச்சரே என்கிட்ட அவிங்களுக்கு சொல்லித்தர சொல்லுவாங்க. சில சமயம் நல்லா படிக்காம கிளாஸ்க்கு உள்ள வரக் கூடாதுன்னு அவிங்க வெளிய நிப்பாங்க. நான் உள்ளே உக்காந்திருப்பேன். ஒரு வேல குளத்துல குளிக்கவும் மார்க் எடுக்கணுமோ? ஆனா, நமக்குதான் நீச்சல் தெரியுமே..?” என்று என்னென்னவோ யோசிச்சான். பெரியவங்களுக்குத் தெரியாம குளத்துல குளிச்சிக்கலாம்னு முடிவுசெஞ்சான்.

கூட இருந்த எல்லா பயலுகளும் குதிச்சதனாலயும், சுத்தி பெரியவுக யாருமே இல்லாததனாலையும் பரியும் பயப்படாம குதிச்சான். நேரம் போறதே தெரியாம ரொம்ப நேரம் தண்ணிக்குள்ளேயே ஓடி புடிச்சு விளையாடினாங்க. அப்போதான் தூரத்துல ஊர் ‘பெரியவங்க’னு சொல்லிக்கிற கூட்டம் வந்துச்சு…

**- நரேஷ்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *