)கிட்ஸ் கார்னர்!

Published On:

| By Balaji

அதிகாரம்தான் அந்தப் பொருள்!

அந்தக் குரல் சொன்னதுல பரிக்கு உடன்பாடில்ல. அதெப்படி அதிகாரம் மனிதனைப் பழக்கப்படுத்தும், அதிகாரம்னா என்ன… அப்டீன்னு பரிக்குப் பல கேள்விகள்.

வழக்கம்போல நம்மளையே யோசிக்க விட்டுடுமோனு பரி யோசிச்சிட்டிருந்தப்போ, படம் ஆரம்பிக்கிற சத்தம் கேட்டது.

இரு குரங்குக் குழுக்கள் சண்டையிடும் காட்சி காட்டப்பட்டது. இரு சிங்கங்கள் சண்டையிடும் காட்சி காட்டப்பட்டது. இதுபோலவே நிறைய விலங்குக் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும் காட்சி காட்டப்பட்டது.

“இந்த விலங்குகள் எல்லாம் எதுக்காக சண்டையிடுதுன்னு தெரியுதா பரி?” கேட்டது குரல்.

பரிக்கு நிறைய பதில்கள் இருந்தாலும் சரியான பதில் தெரியல. அதனால அமைதியா இருந்தான். ஆனா, அந்தக் குரல் என்ன பதில் எதிர்பார்க்குதுன்னு பரிக்குத் தெரியும். அந்தப் பதிலையே கேள்வியா கேட்டான் பரி.

“அதிகாரத்துக்குத்தான் சண்டை போடுதுன்னு சொல்லுறியா?”

“இல்லைன்னு சொல்ல ஒரே ஒரு காரணம் சொல்லு” – திரும்பிக் கேட்டது குரல்.

பரிகிட்ட பதில் எதுவும் இல்லை. பதில் சொல்ல முடியாதுன்னு அந்தக் குரலுக்கும் தெரியும். பரிக்குப் புரியவைக்கத் தொடங்கியது அந்தக் குரல்.

“ஒவ்வொரு விலங்குக் குழுவும், தனக்குன்னு ஒரு எல்லையை வகுத்து வெச்சிக்கும் பரி. அந்த எல்லைக்குள்ள வேற விலங்குகள் வரும்போது, அவை சண்டையிடும்” என்று பொறுமையாகப் பாடம் சொல்ல ஆரம்பிச்சது குரல்.

“இதுக்கும் அதிகாரத்துக்கும் என்ன சம்பந்தம்?”னு முந்திகிட்டு கேட்டாம் பரி.

சிரிச்சிட்டே பதில் சொன்னது குரல். “இடம்தான் பரி அதிகாரம்!”

இந்தக் குரல் இப்படிதான் ஒரு வரில எல்லா பதிலையும் சொல்லிட்டு நம்மல யோசிக்க விட்டுடும்னு நொந்துக்கிட்டான் பரி.

அதெப்படி இடம் அதிகாரம் ஆகும்? அப்போ இடம்தான் மனிதர்களைப் பழக்கப்படுத்தியதா..?

**- நரேஷ்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share