ஏன் சண்டை போடணும்?
அதிகாரமும் நிலமும் நம்மை பழக்கப்படுத்தியதுங்கிறதைவிட, நம்மை அடிமைப்படுத்தியதுனு சொல்றதுதான் சரியா இருக்கும் பரி” என்று குரல் சொன்னபோது, பரி அதை கேட்கும் நிலையில இல்ல.
அவனோட யோசனை எல்லாம் வேறயா இருந்துச்சு. ஏன் இந்த விலங்குகள் எல்லாம் சண்டை போடணும்? அன்புதான் எல்லாம்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனால் விலங்குகள்கிட்ட அன்போட சேர்த்து வன்முறையும் இருக்கே! அவை இடத்துக்காக சண்ட போடுது. அடிச்சுக்குது.. அப்போ விலங்குகள்ல இருந்து வந்த மனுஷங்களும் அப்படிதான இருப்பாங்க..!?
பரியின் சிந்தனையில இந்த முறை குரல் குறுக்கிடலை. அவன் சரியாதான் சிந்திச்சிட்டு இருக்கான் என்பதால, குரம் கம்முன்னு இருந்துச்சு.
பரி தொடர்ந்து தனக்குள்ளேயே பேசிக்க ஆரம்பிச்சான். மனுஷங்க இப்படி சண்டை போடுறது எப்படி தப்புனு சொல்ல முடியும்? இந்த சிங்கங்களும் புலிகளும் ஒண்ணுக்கொண்ணு அடிச்சிக்கிறது இயற்கையான விஷயம்னா, அப்போ அந்த விலங்குகள் வழி வந்த மனிதர்களும் அடிச்சிக்குறது இயற்கையான விஷயம்தான?
பரி என்ன முடிவுக்கு வரப்போறான்னு தெரிஞ்சுக்க காத்திருந்தது குரல். ஆனா குரல் எதிர்பார்க்காத விதமா, யோசனையை நிறுத்திட்டு கேள்வி கேட்டான் பரி.
“விலங்குகள் சண்டைபோடுவது இயற்கையான விஷயம்னா, மனுஷங்க சண்ட போடுறதும் சரிதானா? சண்டை போடுறது தப்பில்லையா?” கேட்டான் பரி.
“சரி! தப்பு! “னு ரெண்டு பதில் சொல்லுச்சு குரல்.
“ஏதாவது ஒரு பதில் சொல்லு”ன்னான் பரி.
“நீ இரண்டு கேள்விகள் கேட்டிருக்க பரி. முதல் கேள்விக்கான பதில் சரி. இரண்டாவது கேள்விக்கான பதில் தப்பு”னு குரல் சொன்னப்புறம்தான் பரிக்கு புரிஞ்சது, அவன் கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் வித்தியாசம் இருக்குன்னு.
அந்த வித்தியாசம்தான் இதுவரை நடந்த எல்லாப் பாடங்களுக்குமான பதிலா இருக்கப்போகுதுனு பரிக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.
**- நரேஷ்**�,”