பரி எதிர்கொள்ளப் போகும் அடுத்த சவால் எது?
முதல் தடவையா தைரியத்தை வரவழைச்சு சத்தமா பேச ஆரம்பிச்சான் பரி.
நான் நல்லா இருப்பதற்குக் காரணமே அறிவுதான்னு சொல்லுற. இந்த உடம்பை கட்டுப்படுத்துறதும் அறிவுதான்னு சொல்லுற. அப்போ அறிவு வளர்ச்சி அடையறதுல என்ன தப்பு? மனசு என் உடம்புக்கு எதுவுமே செய்யாதப்போ, அறிவு என்னை கட்டுப்படுத்துறதுல என்ன தப்பு..?”
நீலன் இந்தக் கேள்வியை எப்பவோ எதிர்பார்த்தான்.
“இந்த உடலைக் கட்டுப்படுத்துவது அறிவுதான் பரி. ஆனா, அந்த அறிவை கட்டுப்படுத்துவது மனசு!”னு ரொம்ப சாதாரணமா சொல்லி முடிச்சான் நீலன்.
பரிக்கோ பெரிய ஏமாற்றம். எவ்வளவு கஷ்டப்பட்டு இவ்வளவு பெரிய கேள்வியைக் கேட்டா, ஒரே வரில பதில சொல்லிட்டு அமைதியாயிட்டானேன்னு வருத்தம். விடாம கேட்டான் பரி, “அறிவு எனக்கு நல்லதுதானே செய்யுது அதை எதுக்கு கட்டுப்படுத்தணும்?”
“அறிவுக்கு நல்லது கெட்டதெல்லாம் தெரியாது பரி. அதுக்கு தேவையானவை, தேவையற்றவை மட்டும்தான் தெரியும். மனசுதான் தேவையைத் தாண்டி நல்லதா, கெட்டதான்னு பார்க்கும்.” தெளிவா சொன்னான் நீலன்.
“எனக்குத் தேவையானவை எல்லாமே நல்லதுதானே? எனக்கு சாப்பாடு தேவை, தண்ணி தேவை. இதெல்லாம் நல்லதுதானே?”னு ஏதோ கேட்கணுமேன்னு கேட்டான் பரி.
நீலன் தன்னோட வேலையைக் காட்ட ஆரம்பிச்சான். “பள்ளிக்கூடத்துல இருந்தே நீ இப்படித்தான். வார்த்தையில சொன்னா உனக்கு எதுவுமே புரியாது.”னு நீலன் சொல்லிமுடிக்க பரிக்கு பயம் வந்துடுச்சு.
“திரும்பவும் ஆத்துக்குள்ள தள்ளிவிடப்போறியா?” கேட்டான் பரி.
“அதுக்கும் மேல ஒண்ணு செய்யப்போறேன்”னு ஒரு பெரிய கத்தியாக மாறித் தரையில விழுந்தான் நீலன்.
**- நரேஷ்**�,”