பரியின் கேட்கக் கூடாத கேள்வி!
நீலன் பறந்து வந்து பரிக்கு முன்னாடி மிதந்தான்.
என்னோட உடம்பு நல்லா வாழணும்னா, எனக்கு அறிவு வேணும் பரி. அறிவுதான் உடம்பைக் கட்டுப்படுத்துது. அறிவுதான் இந்த உடம்பை எல்லா அழிவுல இருந்தும் பாதுகாக்குது”னு கைகள் இரண்டையும் ஆட்டி ஆட்டி கதை சொல்லுற மாதிரி சொன்னான் நீலன்.
ஆனா, பாரிக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அறிவு தப்புன்னு சொல்லிட்டு இப்போ புகழ்றானேன்னு சந்தேகம். கேட்கலாம்னு நினைச்சப்போ ஆத்துக்குள்ள தத்தளிச்சது ஞாபகம் வந்தது. அதனால, நீலனே பேசட்டும்னு விட்டுட்டான்.
“நான் சாப்பிடுறது, தூங்குறது, தண்ணி குடிக்கிறது, இயங்குறதுனு எல்லாம் அறிவு வெளிப்படுத்துற உணர்ச்சிகளாலதான். உனக்கு இப்போ பசிக்குதா?” கேட்டான் நீலன்.
அப்போதான் பரிக்குத் தான் இன்னும் சாப்பிடலைனு தெரிஞ்சது. விண்வெளிக்கு வந்ததுல இருந்து பரி ஒரு சொட்டு தண்ணிகூடக் குடிக்கல.
“எனக்குப் பசிக்கவே இல்லை”னு சொன்னான் பரி.
“வயிறு காலியா இருக்குதுன்னு வெச்சிக்கோ. அதுக்கு சாப்பாடு வேணும்ங்கிறதை ‘பசி’ என்கிற உணர்ச்சி மூலமா தெரியப்படுத்துறது அறிவுதான். அப்படித்தான் எல்லா செயல்களும்” என்று விளக்கினான் நீலன்.
பரிக்கு இது சரின்னு பட்டது. உடம்புல தண்ணி இல்லைன்னா ‘தாகம்’ என்கிற உணர்ச்சி வந்து தண்ணி குடிக்க சொல்லுது. உடம்பு சோர்வடைஞ்சா தூங்க சொல்லி கேக்குது.
கூடவே குளிப்பது, வேலை செய்வது, விளையாடுறதுனு எல்லாமே அறிவு சொல்லி செய்யுறதுதான? அப்போ இதெல்லாம்தான் அறிவு வெளிப்படுத்துற உணர்ச்சிகள்தான் என்பது பரிக்கு புரிஞ்சது.
ஆனா, இது புரிஞ்ச நேரத்துலதான் கேட்கக்கூடாத அந்தக் கேள்வியைக் கேட்டான் பரி.
**- நரேஷ்**�,”