)கிட்ஸ் கார்னர்!

Published On:

| By Balaji

உடைந்து சிதறிய பாறை!

தண்ணிக்குள்ள டோனி மூழ்க மூழ்க, பரி மேல போக துடிச்சான். ஆனா, டோனி அவனைப் போகவிடலை.

அந்த ஆறு ரொம்ப ஆழமா இருந்துச்சு. பயந்துட்டே இருந்த பரி, ஆத்தோட ஆழத்துல கருமை நிறத்துல இருந்த உருண்டையைப் பார்த்தான்.

ஆத்துக்கு நடுவுல இவ்வளவு பெரிய பாறையானு ஆச்சரியப்பட்டான் பரி. அப்புறம்தான் தெரிஞ்சது, டோனி அந்த பாறையை நோக்கித்தான் வேகமா நீந்திக்கிட்டு இருக்குன்னு.

இந்த வேகத்துல போய் அந்த பாறையில மோதுனா, நிச்சயமா எலும்புகூட மிஞ்சாது. அதனால, டோனி முதுகுல இருந்து மேல நோக்கி நீந்த ஆரம்பிச்சான் பரி. ஆனா டோனி, பரியைத் தன்னோட உடலோட அழுத்தி பிடிச்சு நீந்துச்சு.

முன்னவிட ரொம்ப வேகமா அந்தப் பாறையை நோக்கி நீந்துச்சு டோனி. பரிக்கு கண்ணை இறுக்கி மூடிக்கிறதைத் தவிர வேற எந்த வழியும் தெரியல.

டோனி அந்த பாறை மேல ரொம்ப வேகமா மோதுச்சு. ‘அய்யய்யோ…’னு தண்ணிக்குள்ள தன்னோட கடைசி மூச்சை விட்டான் பரி.

ஆனா, பாறையில மோதின உடனே தண்ணீர் காணாம போயி, பரி மூச்சுவிட ஆரம்பிச்சான். அவனுக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு.

இறுக்க மூடியிருந்த கண்ணை மெல்லத் திறந்து பார்த்தான். அப்படியொரு அதிசயத்தைப் பரி அதுக்கு முன்னாடி கேள்விப்பட்டதுகூட இல்ல!

அப்போதான் பரிக்கு புரிஞ்சது, அது பாறையில்ல. ஆத்துக்குள்ள இருந்த மிகப்பெரிய காற்றுக் குமிழின்னு!

**- நரேஷ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share