)கிட்ஸ் கார்னர்!

public

விமானத்தை ஓட்டுற பைலட், நமக்கு ஒரு முக்கியமான நியூஸ் வெச்சிருக்காரு. அந்த நியூஸ் நமக்கு வகுப்புகளில் மட்டுமல்ல, வாழ்க்கை முழுவதும் பயன்படக்கூடிய நியூஸ்.

* அதுதான் பணிகள் பட்டியல் (Check list). ஒவ்வொரு விமான ஓட்டுநரும் தன்னோட பணிகள் பட்டியலை ரொம்ப பத்திரமா வெச்சிருப்பாரு. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்துப் பணிகளையும் சரிபார்த்த பிறகுதான் விமானத்தை எடுப்பார்.

* நாம் ஒவ்வொருவரும் ஒரு பணிகள் பட்டியலை வெச்சிருக்கிறது சிறந்தது. தினமும் நாம் பள்ளிக்குக் கிளம்புவதற்கு முன்னாடி நம்மோட பணிப் பட்டியல்ல இருக்கிற அனைத்து வேலைகளையும் செய்திருக்கிறோமா என்று சரிபார்த்துவிட்டுச் சென்றால், வெற்றி நிச்சயம்.

* இந்தப் பணிப் பட்டியல் தினசரி வேலைகளை சரிபார்க்குறதுக்கு மட்டுமில்ல. வாரம் ஒரு முறையும், மாதம் ஒரு முறையும் இந்தப் பணிப் பட்டியலை நாம தொடர்ந்து கவனித்துவந்தால், நம்மோட முன்னேற்றத்தை நாமே பார்த்து பாராட்டிக்கலாம். முன்னேற்றம் எதுவும் இல்லைன்னா அடுத்தடுத்த நாட்கள்ல முன்னேற்றத்துக்கான வேலைகளில் இறங்கிடலாம்.

என்ன குட்டீஸ்? இன்னும் எதுக்கு காத்திருக்கீங்க? சட்டு புட்டுன்னு போயி ஒரு நோட் வாங்கிட்டு வாங்க. உங்க பணிகள் பட்டியலை உருவாக்கிக்கோங்க! அதுவும் இன்னிக்கே!

**- நரேஷ்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *