பனிக் கரடிகளை போட்டோலயும் வீடியோலயும் பாத்திருக்கீங்கள்ல குட்டீஸ்? ரொம்ப அழகா புசுபுசுன்னு இருக்கும். ரொம்ப பெருசா இருக்கும். பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருக்கும். அதே பனிக் கரடிகள், சாப்பிடுறதுக்கு ஒண்ணுமே இல்லாம, வயிறு ஒடுங்கி ஒல்லியா இருந்தா எப்படி இருக்கும். அப்படி ஒரு புகைப்படத்தை பார்க்கும்போதே நம்ம கண்ணு கலங்கிடும்ல… ஓர் உண்மைய சொல்லட்டா நண்பர்களே… அந்த பனிக் கரடிகளின் நிலமையை நாம இப்போ பார்த்தா கதறி அழுதிடுவோம். அப்படிப்பட்ட கொடுமையான இறப்புகள் பனிக் கரடிக்கும் பனிப் பிரதேசத்துல வாழுற மற்ற உயிர்களும் நடந்துட்டு இருக்கு.
கடல் மட்டுமல்ல குட்டீஸ், கடல் உருவாக்கும் பனிப் பிரதேசங்களும் பிளாஸ்டிக் அரக்கனால கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. ஜெர்மனி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆர்டிக் பனிப் பாறைகள்ல அஞ்சு இடங்களைத் தேர்வு செஞ்சு ஆய்வு நடத்துனாங்க. அந்த ஆய்வுல, ஒரு லிட்டர் ஐஸ்கட்டியில் சுமார் 12,000 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருக்கிறதைப் பார்த்து அதிர்ச்சி அடைஞ்சுட்டாங்க.
அந்த ஆய்வின் முடிவுகள் பத்தி அவங்க வெளியிட்ட கட்டுரையில, “மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் அதன் கழிவுகளால் ஆர்டிக் பனிப் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, அங்கு வாழும் அரிய உயிரினங்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன”னு சொல்லிருக்காங்க.
இந்த ஞாயிற்றுக்கிழமை கதை சொல்லணும்தான் நினைச்சேன் குட்டீஸ்… ஆனா, இந்த தொடர்ச்சிய விட்டுடக் கூடாதேன்னு இதைப் பத்தி சொல்லிட்டேன். இந்த வாரம் மட்டும் பொறுத்துக்கோங்க.
அது இருக்கட்டும். சண்டே படத்துக்கு போவீங்களா? ரஜினி படம் காலா வந்திருக்குல்ல, அதைப் பார்ப்பீங்களா? அதுல நமக்கு தேவையான பல விஷயங்களும் இருக்கு. அந்த விஷயங்களைப் படம் பார்க்குறதவிட ஜாலியா நாம பார்க்கப்போறோம்…
ரெடியா குட்டீஸ்?
**- நரேஷ்**�,