எது தவறான பாதை?
நீலன் பேசுறதைப் பரியால முழுசா புரிஞ்சுக்க முடியல. இருந்தாலும் கேட்டுட்டு இருந்தான்.
மனுஷங்க விவாதிக்கிறதெல்லாம் அறிவுல இருந்து பரி. அது விளக்கத்தை மட்டும்தான் தருமே தவிர, தீர்வைத் தராது.”
இப்போவரைக்கும் அறிவும் மனசும் ஒண்ணுதான்னு நினைச்சிட்டு இருந்தான் பரி. நீலன் சொன்னதை கேட்ட பிறகுதான் இரண்டும் வேற வேறனு தெரிஞ்சது பரிக்கு.
“இந்த மனுஷங்க மனசைவிட்டு ரொம்ப தூரம் போயிட்டாங்க.” – நிறுத்தி அடுத்த வார்த்தைகளைத் தெளிவாகவும் நிதானமாகவும் சொன்னான் நீலன்,
**”மனுஷங்க தவறான பாதையில ரொம்ப வேகமா பரிணாம வளர்ச்சி அடைஞ்சுட்டாங்க.”**
“எதை தவறான பாதைன்னு சொல்லுற?” கேட்டான் பரி.
“அறிவை மட்டுமே வளர்த்துக்கிட்டது” – சொன்னான் நீலன்.
“வேற என்ன செஞ்சிருக்கணும்ங்கிற?”
“மனசு சொல்லுறபடி அறிவை நடத்தி இருக்கணும்.”
“மனசு வேற அறிவு வேறயா?”
“இந்தக் கேள்விக்கு வார்த்தைகள்ல பதில் இல்லை”
“பின்ன எதுல…”னு பரி முழுசா கேக்குறதுக்குள்ள வேகமா ஓடுற ஆத்துக்குள்ள பரிய தள்ளிவிட்டான் நீலன்.
பரி ஆத்துத் தண்ணீர்ல திணற ஆரம்பிச்சான்.
**- நரேஷ்**�,”