உணவு கெட்டுப்போவது ஏன்?
உங்க கிட்ட ஒரு கேள்வி. நாம வீணாக்குற உணவுப் பொருட்கள் எல்லாம் என்னவா ஆகுது?
புழு புடிச்சிடும், அழுகிப்போயி மக்கிடும்.
சரி, அந்த புழுக்கள் எங்கே இருந்து வந்திருக்கும்?
எங்கேயாவது பக்கத்துல இருந்து வந்திருக்கும்.
ஓ… அப்படியா? அப்போ அம்மா கிச்சன்ல கண்ணாடி பாட்டில்கள்ல காத்துகூடப் போக முடியாத அளவிற்கு அடைச்சு வெச்சிருக்க தானியங்கள்ல எப்படி புழு புடிக்குது?
…..!?
ஈரக்காற்றுகூடப் புக முடியாத அளவுக்குக் கட்டிவைத்து டின்களில் விற்கப்படும் உணவுப் பொருட்கள்ல, குறிபிட்ட நாளுக்கு அப்புறம் எப்படி புழுக்கள் உற்பத்தி ஆகுது?
…..!?
பதில் தெரியலைன்னு வருத்தப்படாதீங்க குட்டீஸ். ஏன்னா, இந்த கேள்விகளுக்கு இன்னும் விஞ்ஞானிகளாலேயே பதில் கண்டுபிடிக்க முடியலை. இதற்காகப் பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் பண்ணிட்டு இருக்காங்க. ஆனா, அவங்க ஒப்புகிட்ட ஒரு தியரி இருக்கு. அது என்னன்னா…
“எங்கே உணவு இருக்கிறதோ, அங்கே அதைச் சிதைக்க உயிரினக் கூட்டங்கள் உருவாக்கப்படுகிறது.”
இந்த உணவு என்பது நீர், மண், செடின்னு எதுவா வேணும்னாலும் இருக்கலாம்.
உதாரணத்திற்கு நீர் மிகுந்து பல நாள் பயன்படுத்தாம இருந்தாலோ அல்லது நீர் அழுக்காகிட்டாலோ அதுல பூஞ்சனம் பிடிக்கும். புழுக்கள் வளரும். அதாவது பயன்படுத்தப்படாத நீர் என்பது பிற சிற்றுயிர்களுக்கு உணவு.
இதே விதிதான் அனைத்துப் பொருட்களுக்கும்.
ஒரு விஷயத்தை உங்களுக்கு மிக விளக்கமாகச் சொல்ல வேண்டும்.
நமக்குன்னு சில உணவுகள் இருக்கு. அந்த உணவுகள் நாம சாப்பிட முடியாத நிலைக்குப் போகும்போது (கெட்டுப்போகும்போது) அது பிற உயிர்களின் உணவா மாறிடுது. கெட்டுப்போன உணவு நமக்கு நல்லதில்ல. ஆனா, அதுதான் மற்ற உயிரினங்களோட ஆதாரமா இருக்கு.
சரி, காற்றுக்கும் இந்த விதிகளுக்கும் என்ன சம்பந்தம்?
**- நரேஷ்**�,