)கிட்ஸ் கார்னர்!

public

பூமியை எப்படி நீர் நிறைந்த இடமாக மாற்றுவது?

புதிதாக நீரை உருவாக்கணும், கொண்டு வரணும் அப்படிங்கிற தேவையெல்லாம் நமக்கு இல்லை குட்டீஸ். ஏன்னா, ஏற்கெனவே பூமியின் பரப்பில் 70 சதவிகிதம் நீர் சூழ்ந்துள்ளதுன்னு நீங்க படிச்சிருப்பீங்க.

ஆனா, அதைவிட முக்கியமான ஒரு கணக்கு இருக்கு. அது நம்ம கண்ணுக்குத் தெரியாத நீர். நம் கண்களுக்குத் தெரியக் கூடாதுன்னு மறைத்து வைக்கப்பட்ட நீர். அந்த நீர்தான் குட்டீஸ், பூமியின் நிலைத்தன்மைக்கு ஆதாரமான நீர்.

பூமியில் உயிர் வாழ்வதற்கு கடல் எப்படி முக்கியமோ, அதே அளவுக்கு இந்த பூமி உயிர் வாழ்வதற்கு அந்த மறைத்து வைக்கப்பட்ட நீர் முக்கியம். அந்த நீர்தான் நிலத்தடி நீர். அதை நாம தொடவே கூடாது. ஆனா, அதைத்தான் எந்தத் தடையும் இல்லாம எக்குத்தப்பா உறிஞ்சிட்டிருக்கோம்.

ஏன்னா, நமக்கு உடம்புக்கு ரத்தம் மாதிரிதான் நிலத்தடி நீர் பூமியின் ரத்தம். அதை நாம உறிஞ்சுட்டே இருந்தா, பூமிக்கு உடம்பு சரியில்லாமதான் போகும் நண்பர்களே..? அதுதான் நடந்துட்டு இருக்கு!

பூமியோட மைய வெப்பத்தின் ஆற்றல், நம்மால் அளவிட முடியாதது. யாராலும் இதுவரைக்கும் பூமியோட மையத்தை (Earth core) அடைய முடியல. வெப்பத்தால தகித்துக்கொண்டிருக்கும் பூமியின் மைய வெப்பத்தை நிலத்துக்குக் கடத்தாம பாதுகாப்பதில் முக்கியப் பங்கு நிலத்தடி நீருக்கு இருக்கு. அதனாலதான் விஞ்ஞானிகள் நிலத்தடி நீரை பூமியோட ரத்தம்னு சொல்லுறாங்க!

பூமிக்கு மேலிருந்த தண்ணீரைச் சுத்தமா அழிச்சிட்டு, இப்போ 500, 1000, 5000 அடி வரை ஆழ்துளைக் கிணறுகள் அமைச்சு நீரை உறிஞ்சிட்டிருக்கோம். 100 அடிக்குக் கீழே இருக்கும் நிலத்தடி நீரையே பயன்படுத்தக் கூடாது. ஆனா, 5000 அடிக்கும் மேல போயிட்டிருக்கவங்களை என்ன செய்யலாம் குட்டீஸ்?

அது இருக்கட்டும். இந்த நிலத்தடி நீர் பத்தி சொன்னதும் உங்களுக்குள்ள ஏதாவது கேள்வி எழுந்ததா? நீங்க கேக்க நினைத்தது இந்தக் கேள்விகள்தானா?

1) ஏன் நிலத்தடி நீரை நாம் பயன்படுத்தக் கூடாது?

2) நிலத்தடி நீரைப் பயன்படுத்தக் கூடாதுன்னா, கிணறு வெட்டக் கூடாதா? மண் ஊற்று, குளங்களில் ஊறும் நீரெல்லாம் நிலத்தடி நீர்தானே? அதைப் பயன்படுத்தக் கூடாதா?

பதில்களை ஒவ்வொண்ணா பார்ப்போம்!

**- நரேஷ்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *