}கிச்சன் கீர்த்தனா: வேர்க்கடலைக் காரக்குழம்பு!

Published On:

| By Balaji

எல்லா காலங்களிலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடியது வேர்க்கடலை. முற்றிய வேர்க்கடலையாகப் பார்த்து வாங்கி வெயிலில் காயவைத்து பாதுகாத்தால், வறுத்து சாப்பிடவும், உருண்டை பிடிக்கவும், சட்னி மற்றும் இப்போது நிலவும் நெருக்கடி நேரத்தில் குழம்பு தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.

**என்ன தேவை?**

தோலுரித்த பச்சை வேர்க்கடலை – 100 கிராம்

புளி – ஒரு சிறிய எலுமிச்சைப்பழ அளவு

காய்ந்த மிளகாய் – ஒன்று

கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்

சாம்பார் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்

உளுந்து அப்பளம் (சிறியது) – ஒன்று

வெந்தயம் – ஒரு டீஸ்பூன்

கடுகு – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு,

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

**எப்படிச் செய்வது?**

பச்சை வேர்க்கடலையை குக்கரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போடவும். அதில் சாம்பார் பொடி சேர்த்து அப்பளத்தையும் பொடியாக உடைத்துப் போட்டு வறுத்து, புளியை 300 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரைத்துவிட்டு தேவையான உப்பு சேர்க்கவும். வேகவைத்த கடலையைத் தண்ணீர் வடித்துப் போட்டு கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

[நேற்றைய ரெசிப்பி: மாங்காய் ரசம்](https://minnambalam.com/public/2020/04/14/3/kitchen-keerthana-mango-rasam)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share