இந்திய ஊறுகாய்களின் ராணி என்றால் அது மாங்காய் ஊறுகாய்தான். மாங்காய் ஊறுகாயிலேயே மாநிலத்துக்கு மாநிலம் சுமார் நூறு வகைகள் இருக்கின்றன. அத்துடன் மாங்காயுடன் வேறு பொருள்களைச் சேர்த்தும் உடனடியாகச் சாப்பிடும் ஊறுகாய்களைத் தயாரிக்கிறார்கள். அவற்றில் ஒன்று மாங்காய் இஞ்சி – மாங்காய்த் தொக்கு.
**என்ன தேவை?**
மாங்காய் இஞ்சித் துருவல், மாங்காய்த் துருவல் – தலா ஒரு கப் (250 மில்லி கப்)
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
கடுகு – முக்கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
வெந்தயப்பொடி – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் மாங்காய்த் துருவல், மாங்காய் இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, உப்பு சேர்த்துச் சுருள வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். தேவையானபோது பரிமாறவும்.
[நேற்றைய ரெசிப்பி: செட்டிநாட்டு ஊறுகாய்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2020/04/23/3/kitchen-keerthana)�,