குச்சிக்கிழங்கு, குச்சிவள்ளிக்கிழங்கு, மரச்சினிக்கிழங்கு என்றும் மரவள்ளிக்கிழங்கு அழைக்கப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மாவுப் பொருளே ஜவ்வரிசி. பச்சரிசி மாவுடன் மரவள்ளிக்கிழங்கையும் சேர்த்து இந்த மரவள்ளிக்கிழங்கு முறுக்கு செய்து அசத்துங்கள்.
**என்ன தேவை?**
மரவள்ளிக்கிழங்கு – கால் கிலோ
பச்சரிசி மாவு – அரை கிலோ
இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய் – 6
ஓமம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – அரை லிட்டர்
வெண்ணெய் – 50 கிராம்
**எப்படிச் செய்வது?**
இஞ்சி, பச்சை மிளகாய், ஓமத்தை விழுதாக அரைத்துக்கொள்ளவும். மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து துருவிக்கொள்ளவும். அதில் அரிசி மாவு, அரைத்த விழுது, உப்பு, வெண்ணெய் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை சிறு சிறு முறுக்குகளாகப் பிழிந்து பொரித்தெடுக்கவும்.
[நேற்றைய ரெசிப்பி: மரவள்ளிக்கிழங்கு ஓட்ஸ் கட்லெட்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/02/19/9)�,