கிராமங்களில் தோட்ட வேலைக்குச் செல்பவர்கள், வேலை முடிந்து வரும்போது சாலையோரங்களில், வேலியோரங்களில் கண்ணில் படும் கீரைகளை எல்லாம் பறித்து வந்து சமைத்து உண்பார்கள். அப்படிக் கொண்டுவரும் கீரைகளை, ‘பல கீரை’ என்று அழைப்பார்கள். அந்த பல கீரைகளில் குறிப்பிடத்தக்கது மணத்தக்காளிக் கீரை.
**என்ன தேவை?**
மணத்தக்காளிக் கீரை – ஒரு கப்
குடமிளகாய் – ஒன்று (சிறியது)
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
புளி – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
மணத்தக்காளிக் கீரையை ஆய்ந்து தண்ணீரில் கழுவி எடுத்து வைக்கவும். குடமிளகாயைச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாகச் சிவந்ததும் காய்ந்த மிளகாய் சேர்த்து, பிறகு கீரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் குடமிளகாய், புளி, உப்பு சேர்த்து அடுப்பைக் குறைத்து மூன்று நிமிடங்கள் வதக்கி, இறுதியாகத் தேங்காய்த் துருவலையும் சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டி அடுப்பை அணைக்கவும். ஆறியதும் அதை மிக்ஸியில் சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும்.
குறிப்பு:
புளிப்பு, காரத்தை உங்கள் விருப்பத்துக்கேற்பக் கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம். இந்தத் துவையலைக் கெட்டியாக அரைத்தால் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். தண்ணீர் விட்டுக் கரைத்தால் இட்லி, தோசைக்கு சட்னி போல மேட்ச் ஆகும். வெளிர் நிறக் கீரைகளாகப் பார்த்து வாங்கினால் கசப்பு இருக்காது. கரும்பச்சை நிறக் கீரைகள் சற்றுக் கசப்பைத் தரும்.
**என்ன பலன்?**
வயிற்றுப் புண்ணுக்கு அருமருந்தான மணத்தாக்காளிக் கீரையைக் கூட்டு, பொரியல், சூப் என்று ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.
[நேற்றைய ரெசிப்பி: ஆலு பாலக்](https://minnambalam.com/k/2019/07/17/1)
**
மேலும் படிக்க
**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**
**[ வைகோ எம்.பி.யாக சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/07/17/51)**
�,”