}கிச்சன் கீர்த்தனா: பொன்னாங்கண்ணி கீரை பொரியல்

Published On:

| By Balaji

‘கீரைகளின் ராஜா’ என வர்ணிக்கப்படும் கீரை, பொன்னாங்கண்ணி. மழைக்காலங்களில் அதிகமாகக் கிடைக்கும் இதைத் தொடர்ச்சியாக உணவில் பயன்படுத்திவந்தால், மேனி பொன் போன்று மினுமினுக்கும். அதனால்தான், பொன்+ஆம்+காண்+நீ = பொன்னாங்கண்ணி எனப் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள். உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் பயன்படும் ஆற்றல் வாய்ந்தது இக்கீரை. தொடர்ந்து 48 நாட்கள் உண்டு வந்தால், பகலில்கூட நட்சத்திரங்களைப் பார்க்கலாம் எனச் சொல்வார்கள். அந்த அளவுக்கு கண்பார்வையைக் கூர்மையடையச் செய்யும் சக்தி இக்கீரைக்கு உண்டு.

**என்ன தேவை?**

பொன்னாங்கண்ணிக் கீரை – ஒரு சிறிய கட்டு

பாசிப்பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

உளுந்தம்பருப்பு – அரை டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 10

காய்ந்த மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிது

**எப்படிச் செய்வது?**

ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து முக்கால் பதத்துக்கு வேகவைத்துக் கொள்ளவும். கீரையை நன்றாக கழுவி காம்புகளை ஆய்ந்து பொடிதாக நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கிவைத்துள்ள கீரையும், உப்பும் சேர்த்து நன்றாக கிளறவும். கீரையில் தண்ணீர் இருப்பதால் தண்ணீர் சேர்க்க தேவை இல்லை. கீரை நன்கு வெந்ததும் வேகவைத்துள்ள பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

**என்ன பலன்?**

பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் சேர்த்து வருபவர்களுக்கு, கண் தொடர்பான நோய்கள், காச நோய், இருமல், உடல் உஷ்ண நோய்கள், வாதம் தொடர்பான நோய்கள் வராது. பொன்னாங்கண்ணிக் கீரையில் இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின்-ஏ, பி, சி ஆகியவையும் அடங்கியுள்ளன. குறிப்பாக வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**

**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share