சனி, ஞாயிறு போன்ற தினங்களில், குழந்தைகளுக்கு யம்மியாக சமைத்துக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் இருக்கும். அப்படியானவர்களுக்காக, சூப்பர் டூப்பர் யம்மி ரெசிப்பி இந்த பூண்டு புரொக்கோலி மஷ்ரூம் ஃப்ரை. குழந்தைகளுக்கு மட்டுமல்ல; பெரியவர்களுக்கும் ஏற்றது.
**என்ன தேவை?**
காளான் – 100 கிராம்
புரொக்கோலி – 100 கிராம் (நறுக்கவும்)
பூண்டு – 5 பல்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
ஒரிகானோ – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
**எப்படிச் செய்வது?**
கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு புரொக்கோலி சேர்த்து வேகவைக்கவும். புரொக்கோலி பாதி வெந்தவுடன் சுத்தம் செய்து நறுக்கிவைத்த காளான் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு உப்பு, மிளகுத்தூள், ஒரிகானோ சேர்த்து நன்கு டாஸ் செய்து இறக்கவும்.�,