திங்கட்கிழமை போன்ற நாட்களில் சாதத்தைச் சுலபமாக வடித்துவிடலாம்; அதற்கு என்ன குழம்பு வைப்பது என்று நினைப்பவர்கள் அநேகர். அப்படிப்பட்டவர்கள் எளிதாகச் செய்யக்கூடிய வகையிலும் சத்தான உணவாகவும் அமையும் இந்த புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்.
**என்ன தேவை?**
வடித்த சாதம் – ஒரு கிண்ணம்
வறுத்த வேர்க்கடலை, கடலைப் பருப்பு – தலா 50 கிராம்
முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு – தலா 10
உலர்ந்த திராட்சை – 20
நெய், உப்பு – தேவையான அளவு.
**எப்படிச் செய்வது?**
கடாயில் நெய் விட்டு சாதம், உப்பு தவிர கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து பொன்னிறத்தில் வறுக்கவும். அதில் சாதம், உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிது மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
புரோட்டீன் ரிச்சாக உள்ள இந்த நட்ஸ் ரைஸ், உடனடி எனர்ஜி கொடுக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
[நேற்றைய ஸ்பெஷல்: செம்புப் பாத்திரங்களில் உணவுகளை வைத்துச் சாப்பிடலாமா?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/02/23/2)�,