கிச்சன் கீர்த்தனா: நவராத்திரி ஸ்பெஷல் – கொள்ளு சுண்டல்!

Published On:

| By Balaji

கடவுளை வழிபடும் கிராம மக்கள் கிழங்கு, தட்டைப்பயறு, மொச்சை, கொள்ளு மற்றும் நவதானியங்களை வேகவைத்து, படையல் செய்து வழிபடுவர். அந்த வகையில் எலும்புக்கும் நரம்புக்கும் நல்ல பலம் தரக்கூடிய கொள்ளுவை முளைகட்டி இந்தச் சுண்டல் செய்து அம்பாளுக்குப் படைத்து வீட்டிலுள்ளவர்களுக்கும் கொடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

**என்ன தேவை?**

முளைகட்டிய கொள்ளு – ஒரு கப்

காய்ந்த மிளகாய் – 2

கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்

இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

முளைகட்டிய கொள்ளுவை குக்கரில் வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெந்த கொள்ளு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய்த்துருவல் தூவி இறக்கவும்.

[நேற்றைய ஸ்பெஷல்: வேர்க்கடலை சுண்டல்](https://minnambalam.com/k/2020/10/21/1)

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel