e“சூடான சாதத்தில் துவையலைச் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ளம் செய்து… அதில் பூண்டு ரசத்தை விட்டு சாப்பிட்டால்… ஆஹா, தேவாமிர்தம்!” என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவர்கள், இந்த நவீன யுகத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களையெல்லாம் திருப்திப்படுத்தும் இந்தச் சீரகத் துவையல். அத்துடன் பசியைத் தூண்டும், வாய்க்கசப்பை நீக்கும். உள்ளுறுப்புகளைச் சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும்.
**என்ன தேவை?**
சீரகம் – கால் கப்
இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்)
சின்ன வெங்காயம் – 5
புளி – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 5
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
**எப்படிச் செய்வது?**
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை வதக்கவும். ஆறவிட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். விருப்பப்பட்டால், எண்ணெயில் சிறிதளவு கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்க்கலாம்.
இந்தத் துவையலை சூடான சாதத்தில் சேர்த்துச் சாப்பிடலாம்.
[நேற்றைய ரெசிப்பி: பச்சைப்பயறு கஞ்சி – எள் துவையல்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2020/03/04/4/kitchen-keerthana)�,