தமிழர்களின் உணவுப் பாரம்பர்யத்தில் சிறுதானியங்களுக்கு எப்போதுமே முக்கியமான இடம் உண்டு. அதிலும், கேழ்வரகு தமிழர் வாழ்வியலில் முக்கியமான இடம் பிடித்திருப்பது. ஒரு காலத்தில் ஏழைகளின் உணவாகக் கருதப்பட்ட கேழ்வரகு, இன்று நோய்களை விரட்டும் வரமாக இருக்கிறது.
**என்ன தேவை?**
சிவப்பு அரிசி மாவு – கால் கிலோ
கேழ்வரகு மாவு – கால் கிலோ
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
சிவப்பு அரிசி மாவு, கேழ்வரகு மாவு இரண்டையும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி, இலகுவான பதத்தில் பிசையவும். இந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இடியாப்பமாகப் பிழியவும். பிறகு, குக்கரிலோ இட்லி பாத்திரத்திலோ வைத்து வேகவிடவும். சூடான இடியாப்பத்துடன் தேங்காய் பால், பால் சேர்த்துச் சாப்பிடலாம்.
**என்ன பலன்?**
வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல உணவு. எனவே, காலை அல்லது இரவு வேளைகளில் சாப்பிடலாம். கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் அனைவரும் சாப்பிட ஏற்றது. கேழ்வரகில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் பல், எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும். தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.
**
மேலும் படிக்க
**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**
**[நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!](https://minnambalam.com/k/2019/07/12/48)**
**[ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!](https://minnambalam.com/k/2019/07/12/19)**
**[நீதிமன்றத்திற்கு சவாலா? தலைமை நீதிபதி கேள்வி!](https://minnambalam.com/k/2019/07/12/57)**
�,”