கிச்சன் கீர்த்தனா: சத்து நிறைந்த கம்பு பருப்பு சாதம்!

Published On:

| By Balaji

இரண்டு நாள்களாக கோயிலில் அம்பாள் அலங்காரத்தில் சுடிதார் போட்டுவிட்டதையே பேசிக்கொண்டிருக்கிறார்களே தவிர, பயறு, கம்பரிசி எல்லாம் வாங்கிக் கொடு எனக் கிராமத்து தோழியிடம் கேட்பதென்னவோ காதுகளில் எட்டவில்லை. இந்த செய்முறையை பார்த்துவிட்டாலாவது வீடு வந்து சேர்கிறதா பார்ப்போம்.

**தேவையான பொருள்கள்:**

கம்பரிசி – ஒரு கப்

துவரம்பருப்பு – கால் கப்

பாசி பயறு – கால் கப்

தண்ணீர் – 3 கப்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய்தூள் – அரை டீஸ்பூன்

வெங்காயம் – 2

தக்காளி – 2

உப்பு – தேவைக்கேற்ப

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிது

தாளிக்க:

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

பொடிக்க:

மிளகு – அரை டீஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

பூண்டு – 4

**செய்முறை:**

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

* கம்பரிசியும், பருப்பு வகைகளையும் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* மிளகு, சீரகம், காய்ந்த மிளகாயை மிக்ஸியில் பொடித்துக் கடைசியில் பூண்டு சேர்த்து ஒரு சுற்றுவிட்டு எடுக்கவும்.

* குக்கரில் எண்ணெய் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்தூள், அரைத்த பொடி சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் தண்ணீரும் உப்பும் சேர்த்துக் கொதிக்க விடவும்.

* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசி, பருப்பு, கொத்தமல்லி தழையும் சேர்த்து 5 விசில் வரை வேகவிடவும்.

* சத்தான கம்பு பருப்பு சாதம் ரெடி.

**கீர்த்தனா தத்துவம்:**

மிடில் க்ளாஸ் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம். எதிர்வீட்டுக்காரன் பார்த்தால் பணக்காரனா நடிக்கணும். சொந்தக்காரன் கடன் கேட்டால் ஏழையா நடிக்கணும்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment