~கிச்சன் கீர்த்தனா: கோதுமை ரவா பைனாப்பிள் அல்வா

Published On:

| By Balaji

விருந்தினர் ஸ்பெஷல்: அசத்தும் இனிப்பு

விருந்தினர் வருகை சங்கடமா, சந்தோஷமா என்கிற தலைப்பில் பட்டிமன்றங்கள் நடத்தப்படும் இந்த நாட்களிலும் வந்த விருந்தினரை உபசரிக்காமல் அனுப்புவது பண்பாடு அல்ல என்பதே நம் சமூகத்தில் காணப்படும் பொதுவான நடைமுறை. அத்தகைய விருந்தினரின் வருகையின்போது இந்த வித்தியாசமான ரெசிப்பி அசத்தும்.

**என்ன தேவை?**

கோதுமை ரவை – ஒரு கப்

பைனாப்பிள் விழுது, சர்க்கரை – தலா ஒன்றரை கப்

வறுத்த முந்திரி துண்டுகள் – 15

குங்குமப்பூ – 4 அல்லது 5 இதழ்கள்

நெய் – 3 டேபிள் ஸ்பூன்

**எப்படிச் செய்வது?**

கடாயில் நெய்விட்டு, சூடானதும் கோதுமை ரவையைச் சேர்த்து சூடுபடக் கிளறவும். பிறகு, ரவை மூழ்கும் அளவுக்குச் சுடுநீர் விட்டுக் கிளறவும். கெட்டியாகி வந்ததும் சர்க்கரை, பைனாப்பிள் விழுது சேர்த்துக் கிளறவும். பிறகு, குங்குமப்பூ சேர்க்கவும். இறுகி கெட்டியாக வந்ததும் முந்திரித் துண்டுகள் போட்டு நன்கு கிளறி இறக்கவும். இந்தக் கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

குறிப்பு: கிளறும் கரண்டியில் எடுத்தால் தானாக ‘தொப்’பென்று விழ வேண்டும். இதுதான் சரியான அல்வா பதம்.

**என்ன பலன்?**

இனிப்பு உணவான இது, வந்தவர்களை அசத்தும். நார்ச்சத்துமிக்க கோதுமை அனைத்து காலத்துக்கும் ஏற்ற உணவு. குறிப்பாக இளம் தலைமுறையினர் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு கோதுமை.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)

**

.

**

[அதிமுக: கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/57)

**

.

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)

**

.

**

[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)

**

.

**

[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)

**

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share