[கிச்சன் கீர்த்தனா: கொள்ளு சுண்டல்

Published On:

| By Balaji

�’மழை சீஸன்’ என்பதுபோல… இது பண்டிகை சீஸன். விநாயகர் சதுர்த்தியை விரட்டிக்கொண்டே வந்து நிற்கிறது நவராத்திரி. ‘ம்… வீட்டைச் சுத்தம் பண்ணி, விதம்விதமா சுண்டல் பண்ணி’ என்று நவராத்திரியை வைத்து நாம் திட்டம் போட்டுக் கொண்டிருப்போம். இதற்கு நடுவே… ‘ஹை… விட்டாச்சு குவார்ட்டலி லீவ்!’ என்று குட்டீஸ்கள் கிளப்பும் குஷி கூவல்கள்… `இவனுங்கள மேய்க்கறதே பெரும்பாடா இருக்கும். இதுல நவராத்திரி வேறயா…’ என்று பலருக்கும் லேசாக அலுப்பை எட்டிப் பார்க்க வைக்கும். என்றாலும், கொண்டாட்டத்தில் குறை வைக்க முடியுமா என்ன?

என்ன தேவை?

கொள்ளு – ஒரு கப்

கடுகு – அரை டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)

காய்ந்த மிளகாய் – ஒன்று

சின்ன வெங்காயம் – 6 (பொடியாக நறுக்கவும்)

கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்

தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – தலா ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் கொள்ளுப் பயற்றைச் சேர்த்து வறுத்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் கொள்ளுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி மூன்று அல்லது நான்கு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு கொள்ளு, கரம் மசாலாத்தூள், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share