8முன்பெல்லாம் குடமிளகாயைக் கண்டாலே ஏதோ அந்நியப் பொருளாக ஒதுக்குபவர்கள், இப்போது பளபளப்பாக மின்னும் குடமிளகாயை வாங்கி விடுகிறார்கள். மற்ற பொருட்களுடன் குடமிளகாயைச் சேர்த்துச் செய்யும் உணவின் சுவை கூடும் என்பது முக்கிய காரணமாக இருந்தாலும் இதில் நார்ச்சத்து அதிகம். இந்த குடமிளகாயைப் பிரதானமாக வைத்து இந்த காப்ஸிகம் ரைஸ் செய்து அசத்துங்கள்.
**என்ன தேவை?**
வடித்த சாதம் – ஒரு கிண்ணம்
குடமிளகாய், வெங்காயம்
பச்சை மிளகாய் – தலா ஒன்று
பூண்டு – 10 பல்
இஞ்சி – சிறிய துண்டு
கடுகு – கால் தேக்கரண்டி
நறுக்கிய கொத்துமல்லி – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
கடாயில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தோலுரித்த பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய குடமிளகாய், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர், கொத்துமல்லி தூவி கிளறவும். அடுத்து சூடான சாதத்தைச் சேர்த்துக் கலக்க… காப்ஸிகம் ரைஸ் ரெடி.
[நேற்றைய ரெசிப்பி: புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/02/24/2)�,