கிச்சன் கீர்த்தனா: கத்திரி முருங்கை பால் குழம்பு!

Published On:

| By Balaji

மழையும் வெயிலும் மாறி மாறி வருவதால் வாயெல்லாம் புண் வந்துடுச்சி, எதுவுமே சாப்பிட முடியல. ஆனா, காரமா சாப்பிடணும், வாய்க்கும் ஒண்ணும் ஆகக் கூடாதுனு நினைக்கிற உங்களுக்காக இன்னிக்கு கொஞ்சம் வித்தியசமாக காரமும் இல்லாமல் இனிப்பும் இல்லாமல் கத்திரி முருங்கை பால் குழம்பு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்…

**தேவையான பொருட்கள்**

கத்திரிக்காய் – 3

முருங்கைக்காய் – 2

தனியா, சீரகம் – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 5

தேங்காய் – 1

புளி – எலுமிச்சையளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

நல்லெண்ணெய் – 1 குழி கரண்டி

மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

**செய்முறை**

முதலில் மிளகாய், சீரகம், தனியா மூன்றையும் லேசாக எண்ணெய்விட்டு வறுத்து அரைத்துக்கொள்ளவும். தேங்காயைத் துருவிப் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர், கத்திரிக்காய், முருங்கைக்காயை நறுக்கிச் சிறிதளவு தேங்காய்ப் பாலில் போட்டுவைக்கவும். புளியைக் கரைத்துக் கொதிக்கவிடவும். அதில் அரைத்த மசாலாவைச் சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் நல்லெண்ணெய் சேர்க்கவும். பிறகு பாலில் ஊறப்போட்டுள்ள காய்களைச் சேர்த்து, வேக வைக்கவும். காய்கள் வெந்ததும் மஞ்சள்தூள், தேங்காய்ப் பால், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

சாதம், டிபன் வகைகள் இரண்டுக்கும் இந்தப் பால் குழம்பு சூப்பராக இருக்கும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share