இப்போதைய நிலையில் பலருக்கு ‘வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கலாம்’ என்பது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இதிலும் சில சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக உணவு விஷயம். பணியிடத்தில் 11 மணிக்கு டீ சாப்பிடலாம், 1.30 மணிக்கு மதிய உணவு சாப்பிடலாம் என்ற வரைமுறை இருக்கும். வீட்டில் இருக்கும்போது 12 மணிக்குச் சமையலறையில் இருந்து வரும் நறுமணமே பசியைத் தூண்டும். அப்படிப்பட்ட நேரத்தில் சுய கட்டுப்பாடு அவசியம் என்பதை உணர வேண்டும். அதற்கு இந்த உளுந்துக்கஞ்சி உதவும். வாயுத் தொல்லையைக் குறைக்கக் கூடிய இந்தக் கஞ்சியில் சேர்க்கப்படும் கவுனி அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. வீட்டிலுள்ள அனைவரும் காலை நேரத்தில் அவசியம் பருக வேண்டிய கஞ்சி, இந்த உளுந்துக்கஞ்சி.
**என்ன தேவை?**
கறுப்பு உளுந்து – 100 கிராம்
கவுனி அரிசி – 50 கிராம்
ஓமம் – 10 கிராம்
சீரகம் – 10 கிராம்
உப்பு – தேவைக்கேற்ப
**எப்படிச் செய்வது?**
மேற்கண்ட அனைத்து பொருள்களையும் வெறும் வாணலியில் வாசம் வரும்வரை வறுக்கவும். அனைத்தையும் ஆறவிட்டு உப்பு சேர்த்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். ஒன்றரை டம்ளர் தண்ணீரில் 2 டேபிள்ஸ்பூன் பவுடர் போட்டு கரைத்து கஞ்சி வைத்து சாப்பிடவும்.
[நேற்றைய ரெசிப்பி: நெல்லிக்கனிச்சாறு](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/03/23/3)�,