வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் வித்தியாசமான உணவுகளைச் செய்து அசத்தலாம் என்று சிலர் நினைப்பதுண்டு. ஆனால், என்ன செய்வது என்ற குழப்பம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த உருளைக்கிழங்கு ரவை ஸ்டிக்ஸ் செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அசத்தலாம்.
**என்ன தேவை?**
உருளைக்கிழங்கு – 2
ரவை – ஒரு கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – ஒரு கப்
**எப்படிச் செய்வது?**
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்துக்கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதில் ரவையைச் சேர்த்து நன்றாகக் கிளறிவிடவும் பின்பு அதில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு எண்ணெய் சேர்க்கவும். ரவையானது சப்பாத்தி மாவு பதத்துக்கு வந்த பிறகு அடுப்பை அணைக்கவும். அந்த ரவையில் மசித்துவைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளவும். பின்பு அதை விரல் நீள ரோல்களாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு ஃபிங்கர் ரோல்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். இதற்கு தக்காளி சாஸ் தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.�,