^கிச்சன் கீர்த்தனா: இன்றைய ஸ்பெஷல்…

Published On:

| By Balaji

**வெங்காய சூப்**

தேவையானவை: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 4, பூண்டுப் பற்கள் – 4, பச்சை மிளகாய் – 2, கெட்டியான தேங்காய்ப்பால் – அரை கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமுமாகச் சேர்ந்தது – ஒரு டீஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் வெண்ணெயைச் சூடுபடுத்தி பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இதில், மூன்று கப் நீர் விட்டு மசாலா, உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். வெந்ததும் சிறிது ஆறவிட்டு, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, மிளகுத்தூள், கரைத்த சோள மாவு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும். ஒரு கொதி வர ஆரம்பிக்கும்போது, தேங்காய்ப் பாலை ஊற்றி, கொதிக்கவிட்டு மல்லித்தழையைத் தூவி இறக்க வேண்டும்.

பலன்கள்: வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். புற்றுநோயைத் தடுக்கும். இதில் உள்ள குரோமியம், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

**பாதாம் சூப்**

தேவையானவை: பாதாம் – கால் கப், வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், சோள மாவு – 4 டேபிள் ஸ்பூன், தண்ணீர் – 4 கப், பால் – 1 கப், உப்பு – தேவையான அளவு, மிளகு தூள் – சிறிதளவு, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை குங்குமப்பூ – 1 சிட்டிகை.

செய்முறை: முதலில் பாதி பாதாமை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். மீதமுள்ளதை பால் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், நறுக்கி வைத்துள்ள பாதாமைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்பு, அதில் சோள மாவு சேர்த்து லேசாக கிளறி, பின் தண்ணீரை மெதுவாக ஊற்றி தொடர்ந்து கெட்டி சேரவிடாமல் கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும். கலவையான நன்கு கொதித்ததும், அதில் பால் சேர்த்து அரைத்து வைத்துள்ள பாதாமைச் சேர்த்து, உப்பு, மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, தீயைக் குறைவாக வைத்து, 10 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி, மேலே குங்குமப்பூவை தூவினால், சுவையான பாதாம் சூப் ரெடி.

**கீர்த்தனா சிந்தனைகள்:**

ஒரு விஷயம் உங்களிடம் எவ்வளவு தெளிவாகச் சொல்லப்படுகிறதோ… அவ்வளவு முறை ஏற்கெனவே பலரிடம் சொல்லப்பட்டிருக்கும்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel