மூளையைப் போன்ற தோற்றம் உடைய காலிஃபிளவர், மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. பூக்கோசு என்று அழைக்கப்படும் காலிஃப்ளவருடன் முட்டையையும் சேர்த்து சன்டே ஸ்பெஷலாக்கலாம். 100 கிராம் காலிஃப்ளவரில் கிடைக்கும் கலோரி அளவு 33 தான். காலிஃப்ளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துகள் அதிகம் உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிஃப்ளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. முட்டையும் காலிஃப்ளவரும் சேர்ந்த இந்த பொடிமாஸ் உங்கள் குடும்பத்தை உற்சாகமாக்கும்.
என்ன தேவை?
காலிஃப்ளவர் – கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
முட்டை – 2
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய்விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமானதும் பொடியாக நறுக்கிய காலிஃப்ளவரை சேர்த்து மேலும் வதக்கவும். பின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும். காலிஃப்ளவர் வெந்தவுடன் அதை ஓரமாக அகற்றி, கடாயின் நடுவில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு வதக்கவும். முட்டை வெந்தவுடன் கடாயின் ஓரத்தில் ஒதுக்கிவைத்திருந்த காலிஃப்ளவரையும் முட்டையுடன் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். கறிவேப்பிலை தூவி இறக்கவும். சுவையான காலிஃப்ளவர் பொடிமாஸ் தயார்.
**
மேலும் படிக்க
**
**[திமுக: ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரின் வாரிசுக்கே இந்த நிலையா?](https://minnambalam.com/k/2019/09/07/120)**
**[சந்திரயான் 2 ஸ்ரீராம் சர்மா](https://minnambalam.com/k/2019/09/07/106)**
**[கிணற்றைக் காணவில்லை: வடிவேலு காமெடி அல்ல வழக்கு!](https://minnambalam.com/k/2019/09/06/53)**
**[சந்திராயன் 2: லேண்டர் விக்ரமின் நிலை என்ன?](https://minnambalam.com/k/2019/09/08/17)**
**[பாஜகவுடன் பேச தினகரனுக்கு சசிகலா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/09/06/64)**
�,”