;காஸி : கடலுக்குள் போர்!

public

1971 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடலின் அடியில் நடைபெற்ற போரை ஒரு புத்தகமாக சன்க்லாப் என்பவர், Blue Fish: The War Beneath என்ற பெயரில் வெளியிட்டார். அந்த புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டு, அடுத்த மாதம் 17 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் தி காஸி அட்டாக். இப்படம் ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழியிலும் வெளியாகின்றது.

இந்த படத்தில் நடித்த முன்னாள் நடிகர் ஓம் பூரி அவர்களின் டப்பிங் போர்ஷனை அமிதாப் செய்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. இந்த திரைப்படத்தில் நாசர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் டிரெயிலர் வந்துள்ளது.

இந்தயாவில் உள்ள விசாகப்பட்டினத்தில், INS Vikrant என்ற அதிநவீன கப்பலினை தகர்க்க பாகிஸ்தான் கப்பற்படை நீர்மூழ்கி கப்பல் மூலம் முயற்சிக்கிறது. அதனை தடுக்க முயற்சிக்கும் இந்திய கப்பற்படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்துகின்றனர். இரண்டு கப்பல்களில் இருந்தும் ஏவுகணை தாக்கப்படுகின்றன. எந்த கப்பல் முதலில் தாக்கப்பட்டது. இந்திய கப்பல் படைக்கு என்ன ஆனது போரின் முடிவு என்ன என்பதை நாம் படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு இதுபோன்ற போரினை அடிப்படையாக கொண்ட திரைப்படம் வெளிவர உள்ளதால், இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெரும் என எதிர்பர்க்கப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=Wlc1CwK0-Bg&t=15s�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *