�ஆலியா பட் நடிப்பில் உருவாகிவரும் ‘ராஸி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று (செப்.27) நிறைவடைந்தது. கடந்த நாற்பது நாள்களாக காஷ்மீர் பகுதியில் நடத்துவந்த படப்பிடிப்பு நிறைவடைந்ததை, ஆலியா மற்றும் படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். ஆருஷி கொலை வழக்கை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட ‘தல்வார்’ படத்தை இயக்கிய மேக்னா குல்ஸர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கபூர் & சன்ஸ் படத்தில் நடித்த விக்கி கௌஷல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஹரிந்தர் சிக்கா எழுதிய ‘காலிங் செமத்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் காஷ்மீர் பெண்ணாக ஆலியாவும், பாகிஸ்தான் ராணுவ அதிகாரியாக விக்கியும் நடித்துள்ளனர். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய – பாகிஸ்தான் போரின்போது நிகழ்ந்த சில உண்மை சம்பவங்களை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. த்ரில்லர் படமான இது மும்பை, பஞ்சாப் மற்றும் காஷ்மீர் பகுதிகளில் படமாக்கப்பட்டு இறுதிக்கட்ட படப்பிடிப்பையும் தற்போது முடித்துள்ளது.
கரன் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் வினித் ஜெயினின் ஜங்கிள் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் இசை விஷால் பரத்வாஜ், ஒளிப்பதிவு ஜெய் படேல், படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகவுள்ளதாகப் படக்குழுவினர் முன்பே அறிவித்துள்ள நிலையில் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது.
�,”