காவலர் தேர்வு: திருநங்கைகளுக்கான வயது வரம்பை உயர்த்த கேட்டு வழக்கு!

Published On:

| By Balaji

2ஆம் நிலை காவலர் தேர்வுக்கு திருநங்கைகளுக்கான வயது வரம்பை உயர்த்த கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசின் விளக்கத்தைக் கேட்டு பதில் அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 2465 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதில், பொதுப் பிரிவினருக்கு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, பெண்களுக்கு என தனித்தனியே வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பொதுப் பிரிவினருக்கு 24 வயது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் ஆகிய பிரிவினர்களுக்கு 26 வயது, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 29 வயது, விதவைகளுக்கு 35 வயது, முன்னாள் ராணுவத்தினருக்கு 45 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் திருநங்கைகள் சீர் மரபினர் பிரிவில் வருவதால், 26 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் தங்களுக்கான வயது வரம்பை 45ஆக உயர்த்த கோரி சென்னையைச் சேர்ந்த திருநங்கை தீபிகா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று (ஜூன் 15) நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் விளக்கத்தைக் கேட்டு பதில் அளிக்க மனுதாரர் வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை, ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

**

மேலும் படிக்க

**

**[முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!](https://minnambalam.com/k/2019/06/15/43)**

**[குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/06/14/17)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**

**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share