கால்நடை துறையில் வேலைவாய்ப்பு என இணையதளங்களில் வரும் வதந்திகள் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழக கால்நடை பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கால்நடை பராமரிப்பு உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு சம்பளம் முறையே ரூ.15,000, ரூ.18,000 எனவும் தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமன ஆணை வழங்கப்படும். அதற்கான ஆணை ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என வாட்ஸ் அப் செயலி, முகநூல் உள்ளிட்டவைகளில் பரப்பப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானவை.
இம்மாதிரியான இணையதளங்களில் கால்நடை பராமரிப்புத்துறை குறித்து வரும் போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இது போன்ற போலியான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று அதில் எச்சரித்துள்ளார்.
**ராஜ்**
.