]காலா: ரஜினியோடு நடிப்பது யார் யார்?

public

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘காலா’. கபாலியின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்திருப்பதால் படத்துக்கு ஏக வரவேற்பு. சமீபத்தில் படத்தின் பெயர் மட்டும் ‘ஃபர்ஸ்ட் லுக்’ வெளியாகி உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இதனிடையே, படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்குவதாகப் படக்குழு அறிவித்திருந்தது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று விமானம் மூலம் மும்பை சென்றார்.

ஆனால் அதற்குள் ‘காலா’ படத்தின் ஒரு காட்சி மற்றும் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி பேசிக் கொண்டிருப்பது போல் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் ரஜினி மற்றும் சமுத்திரக்கனி இடம்பெற்றுள்ளனர். மேலும் இயக்குனர் ரஞ்சித்திடம் ரஜினி உரையாடிக் கொண்டிருப்பது போலவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்தப் புகைப்படங்களில் ரஜினி மிக இளமையாக இருக்கிறார் என ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர். இது படக் குழுவினரே வெளியிட்டனரா? அல்லது வேறு யாரும் வெளியிட்டனரா? என்பது பற்றி தகவல் தெரியவில்லை. இதனிடையே காலா படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த விவரமும் வெளியாகியுள்ளதால் மீண்டும் ரஜினியைச் சுற்றி ஒரு பரபரப்பு உண்டாகியுள்ளது.

ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திக்குச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இப்படத்துக்குக் கபிலன், உமாதேவி பாடல்களை எழுதுகிறார்கள். ஒளிப்பதிவு முரளி, கலை ராமலிங்கம், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், சண்டைக் காட்சிகள் திலீப் சுப்பராயன், நடனம் சாண்டி, ஆடை வடிவமைப்பு அனுவர்தன், சுபிகா எனப் படக்குழுவினரையும் அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது படக்குழு. மும்பையில் சுமார் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *