காலநிலை மாற்றத்தைக் கட்டுபடுத்தும் சர்வதேச பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதோடு, தற்போது ஐநாவின் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளுக்கும் முட்டுக்கட்டை போடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று (செப்-8) காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கு அதன் பாதிப்பை எதிர்கொள்ள நிதி அளிப்பது தொடர்பாக ஐநா பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நிதி அளிப்பது தொடர்பான கூட்டம் பாங்காங்கில் கடந்த செவ்வாயிலிருந்து நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில், வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கும் அளிக்க வேண்டிய நிதியை எப்படித் திரட்டுவது என்பதே மைய விவாதமாக இருந்தது. இவ்விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே அரங்கத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
2015இல் பாரீஸ் ஒப்பந்தம் 2020லிருந்து காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர்கள் அளிப்பதாக உறுதி அளித்திருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பல நாடுகளில் வெள்ளம் புயல் மற்றும் அதிக வெப்பம் என காலநிலை மாற்றத்தினால் பாதிப்புகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் பாதிக்கப்படும் நாடுகளுக்கு நிதி அளிப்பதற்கான முயற்சிகளில் ஐநா தீவிரமாக இறங்கியுள்ளது. காலநிலை மாற்றத்திற்கு பெருமளவில் கரியமிலவாயுவை வெளியிடும் வளர்ச்சி அடைந்த நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என்ற விதியை ஒப்பந்தத்தில் முதலில் ஏற்றுக்கொண்ட அமெரிக்கா, தற்போது அதை நீக்கக்கோரி சண்டித்தனம் செய்து வருவதால் நிதி திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
�,