திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு தீப தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனை, இன்று காலை முதல் தமிழக அரசின் இணையதளத்தில் தொடங்கியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 14ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவாக, வரும் 23ஆம் தேதியன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்படும். இதையொட்டி பரணி தீபம், மகா தீபம் தரிசனம் செய்வதற்கான சிறப்புக் கட்டண டிக்கெட் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இன்று (நவம்பர் 21) காலை 11 மணிக்கு, இந்த டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கியது. பரணி தீப தரிசனத்துக்கு 500 ரூபாய் கட்டணத்தில் 500 டிக்கெட்டுகளும், மகா தீப தரிசனத்துக்கு 500 ரூபாய் கட்டணத்தில் 1,000 டிக்கெட்டுகளும், 600 ரூபாய் கட்டணத்தில் 100 டிக்கெட்டுகளும் வழங்கப்படும்.
முன்பதிவு செய்வதற்கு ஆதார் எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி தேவை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி, பதிவு செய்யப்பட்ட செல்போனுக்கும், கட்டணச் சீட்டு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கும் அனுப்பப்படும்.
தரிசன டிக்கெட்டுகள் பெற விரும்புபவர்கள் [இந்த](http://www.arunachaleswarartemple.tnhrce.in/) இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,