சுபஸ்ரீ வழக்கில் காத்து மேலதான் கேஸு போடணும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசியதற்குப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அவரை வறுத்தெடுத்துள்ளனர்.
சட்டவிரோத பேனரால் சுபஸ்ரீ உயிரிழந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் ஆளும் கட்சியினர் இவ்விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். திருச்செங்கோடு தொகுதியிலிருந்து தமிழகச் சட்டமன்றத்துக்கு நான்கு முறை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட பொன்னையன் நிதி, கல்வி, கைத்தொழில், வேளாண்மை,நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார்.
இவர் சுபஸ்ரீ உயிரிழப்பு குறித்து,” காற்றடித்ததால்தான் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்தது. பேனர் வைத்தவரே அதை வேண்டுமென்றே தள்ளிவிடவில்லை. வேண்டுமென்றால் காற்று மீதுதான் வழக்குப் போட வேண்டும்” என்றும் பேசியிருந்தார்.
பொன்னையன் கருத்துக்கு சமூக ஊடகங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூல வலைதள பயனர்கள் சமீப காலமாக நடைபெற்று வரும் குற்றச்செயல்கள் உள்ளிட்ட சம்பவங்களை தொடர்புப்படுத்தி பொன்னையனை விமர்சித்து வருகின்றனர்.
**sᴀɴɢʜɪ sʟᴀʏᴇʀ**
கத்தியால குத்துனதுனாலதான் அவன் இறந்தான்னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுது, அப்ப கத்தி மேலதானே வழக்கு போடனும், கத்திய சொருகனவன் மேல எப்படி வழக்கு போட முடியும்!!???. பொன்னையன் பொன்மொழிகள்!!!
**SJB**
பேனர் வந்து விழுந்ததுக்கு காற்றை கைது செய்யனும்னா.. லெட்டர் கொண்டு வந்து தந்த போஸ்ட்மேன் மேலதானா தேசதுரோக வழக்கு போடனும்..! சொல்லுங்க பொன்னையன்….
**Arul Ramasamy**
காத்தடிச்சு பேனர் விழுந்ததால காத்து மேலதான் கேஸ் போடனும் – பொன்னையன் உனக்கென்னப்பா என்ன வேணும்னாலும் பேசுவே.. முன்பு இப்படித்தான் அம்மாவை ஆணிக்கட்டையால் அடிச்சி கொன்னுட்டாங்கன்னு சொன்னே நெறுக்கி கேட்ட போது வாட்சாப்ல வந்தது பேஸ்புக் பேக் ஐடியில வந்தது என்று ஓடிப்போன…
**தடா ஜெ ரஹிம்**
பேனர் வைத்தவன் மீது வழக்கு போடுவது கூடாது காற்று மீது வழக்கு போடுவது தான் சரி #முன்னாள்_அமைச்சர்_பொன்னையன்… அப்போ எதற்காக பேனர் போட்ட பிரிண்டிங் பிரஸை சீல் வைத்தீங்க ஆபிசர் …
** இடும்பாவனம் கார்த்தி**
காற்றடித்து பேனர் விழுந்ததால் காற்று மீதுதான் வழக்குப் போடணும் என்கிறார் அதிமுகவின் பொன்னையன். உங்க அம்மா மர்ம(!) மரணத்துக்கு எதுக்கு விசாரணை கமிசனெல்லாம் அமைச்சுக்கிட்டு.? உயிரைப் பறிச்ச எமதர்மன் மேலேயே வழக்கப் போடுங்க மகராசன்களா!
** நிமேஷிகா**
உயர்திரு சென்னை காவல்துறை ஆணையருக்கு… காற்று வீசியதால் பேனர் விழுந்தது எனவே காற்றின் மீதுதான் வழக்குப் போடவேண்டும் என அதிமுக பொன்னையன் சொன்னதால், அந்தக் காற்றையும், அதற்கு காரணமான இயற்கையையும் உடனடியாக கைது செய்ய வேண்டுகிறோம்! இப்படிக்கு, பேனருக்கு பயந்து வாழும் சாமான்யன்.
தேவேந்திரன் என்ற பிபிசி ஃபேஸ்புக் நேயர், இவ்வளவு புத்திசாலி அமைச்சர் தமிழ்நாட்டில் இருந்தார் என்பது மிகவும் வியப்பாக உள்ளது. இது தமிழ்நாட்டின் பாக்கியம்; தமிழக மக்கள் நாங்கள் வாங்கி வந்த வரம் அப்படி வேறு என்ன சொல்ல” என்று தெரிவித்துள்ளார்.
**p.rajan**
காற்றின் மேல் தான் போடவேண்டும்.
-பொன்னையன்.
இது உண்மை என்றால் பொன்னையன் கூற்றும் குற்றம் இல்லை.
அவ்வாறு பொன்னயன் கூறுவதற்கு
எது காரணம், யார் காரணம் என்று
நீங்கள்தான் கண்டு பிடித்து நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்லவேண்டும்.�,”