பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலரை விரைவில் மணக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளும் நடிகையுமானவர் சோனம் கபூர். இந்தியில் நடிகர் தனுஷ் நடித்த ராஞ்சனா, டெல்லி 6 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாலிவுட் முன்னணி நடிகைகளுள் ஒருவராய் வலம்வருகிறார். மேலும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவருக்கு, கடந்த வருடம் நடித்த ‘நீரஜா’ படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. ஆரம்ப காலங்களில் கிளாமராக நடிக்க மறுத்தவர் ஒரு கட்டத்துக்குப் பிறகு கிளாமராக நடிக்க முடிவு செய்து அதன்படி நடித்தும்வருகிறார். சில மாதங்களுக்கு முன் டாப்லெஸ் கவர்ச்சி போஸ்களில் தனது போட்டோக்களை இணையதளத்தில் வெளியிட்டார்.
இந்த நிலையில் சோனம் கபூர் தனது நீண்ட நாள் காதலரும் நண்பருமான ஆனந்த் அஹுஜாவை விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சோனம்-ஆனந்த் காதலை இரு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டதாகச் சொல்லப்படும் நிலையில், வரும் ஜூன் மாதம் சோனம்-ஆனந்த் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் என்ற இணையதளப் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனாலும் இது குறித்து உறுதியான தகவல் இன்னும் வெளிவரவில்லை.
�,”