}காதலரைக் கரம்பிடித்த ‘கண்கள் இரண்டால்’ நாயகி!

Published On:

| By Balaji

நடிகை சுவாதி அவரது காதலரான விகாஸைக் கரம்பிடித்துள்ளார்.

தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சுவாதி, நடிகரும் இயக்குநருமான சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படம் வாயிலாக தமிழ் சினிமாவில் கால் பதித்தார். அந்தப் படம் சிறந்த அறிமுகத்தையே கொடுத்திருந்தது. குறிப்பாக சுவாதி என்றாலே அதில் இடம்பெற்ற கண்கள் இரண்டால் எனும் பாடல்தான் உடனே நினைவுக்கு வரும் எனச் சொல்லும் அளவுக்கு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிப் போயிருந்தது.

அவருக்கு நல்ல அறிமுகத்தை அந்தப் படம் கொடுத்தபோதும் அதன் பின்னர் அவர் நடித்த மற்ற படங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. அதனால் முன்னணி நடிகையாகவும் அவரால் ஜொலிக்க முடியவில்லை. அதே நேரம் தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமா என தொடர்ந்து சில படங்களில் நடித்தே வந்தார் சுவாதி.

இந்த நிலையில் அவருக்கும் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பைலட்டாகப் பணியாற்றும் விகாஸுக்கும் இடையே காதல் இருந்துவந்தது. இவர்களது திருமணத்திற்கு வீட்டில் சம்மதம் தெரிவித்ததையடுத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது இருவருக்கும் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஐதராபாத்தில் திருமணம் நடந்துள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்துகொண்ட நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு இன்று நடக்கிறது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment